350 கோடியை அட்லீக்கு தூக்கி கொடுத்த ஷாருக்கான்.. நம்பிக்கையை காப்பாற்றுவாரா இயக்குனர்

Jawan Movie
Jawan Movie

Atlee speech : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகிய வெற்றி நடை கொண்டு வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் அட்லீ கத்துக்கிட்ட மொத்த இதையும் படத்தில் காட்டி இருக்கிறார்  படத்தில் ஒவ்வொரு சீனும் செம்ம மாஸாக இருக்கிறது. ஷாருகான், விஜய் சேதுபதி, நயன்தாரா..

யோகி பாபு என அனைவரும் கொடுக்கப்பட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்துள்ளனர் என பலரும் கூறுகின்றனர். இதுவரை நல்ல விதமாக கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஷாருக்கான் பற்றி  பேசி உள்ளார் அட்லீ அவர் சொன்னது.. ஜவானின் பயணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது நானும், ஷாருக்கானும் சென்னையில் ஐபிஎல் மேட்ச் பார்த்த பொழுது எடுத்த புகைப்படம் வெளியாகியிருக்கும் அப்போது தான் அவரை நான் சந்தித்தேன்.

அதன் பின்னர் லாக்டவுன் சமயத்தில் தான் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனேன் தமிழ் மீடியாவும், தமிழ்நாடு ரசிகர்களும் அளித்த அன்பு தான் என்னை ஷாருக்கான் வீட்டு வரை கொண்டு சென்றது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் 350 கோடி பட்ஜெட்டை கொடுத்தார் யார் இந்த மாதிரியெல்லாம் பண்ணுவாங்க ஆரம்பிக்கும் பொழுது தெளிவாக சொல்லிவிட்டார் உங்களுடைய டெம்ப்லேட்டில் படத்தை எடுங்க..

அதில் நான் நடிக்க மட்டும் செய்கிறேன் என்று அதேபோல் கதாபாத்திராம் தேர்வு செய்யும் முழுமையாக என்னிடமே ஒப்படைத்து விட்டார் இன்று நான் இந்த அளவிற்கு இருக்கிறேன் என்றால் அவை எல்லாம் தமிழ் சினிமா எனக்கு கொடுத்தது. அதனால்தான் தமிழ் சினிமா பணியாளர்களுக்கு ஜவான் படம் மூலம் எந்த அளவிற்கு வாய்ப்பு கொடுக்க முடியுமா அந்த அளவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளேன்.

மெர்சல் படத்திற்காக 20 நாள் வெளிநாட்டில் ஷூட் பண்ணியதை தவிர வேறு எந்த படத்துக்காகவும் நான் வெளிநாட்டில் படபிடிப்பு வைக்கவில்லை ஜவான் படத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து 4500 பேரை பயன்படுத்தி இருந்தோம் அதற்காக பெப்சி எங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தது ஜவான் மூலம் இப்படி ஒரு நல்ல விஷயம் செய்ததற்காக பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.