தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நடிகை சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இவ்வாறு நடைபெற்ற இந்த திருமணம் மிக கோலாகலமாக மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது.
மேலும் இந்த திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் வந்த நிலையில் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருகான் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து கொடுத்துள்ளார்கள்.
அந்த வகையில் நயன்தாராவின் திருமணத்திற்கு பாரம்பரிய உடை அணிந்து கொண்டு நடிகர் ஷாருகான் வந்தது மட்டுமில்லாமல் அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. ஆனால் நடிகர் ஷாருக்கானுக்கு சமீபத்தில் வைரஸ் தொற்று இருந்ததாக கூறப்பட்டது.
இதனால் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளிவந்த நிலையில் நேற்று நடிகை நயன்தாராவின் திருமணத்தை சாருக்கான் கலந்து கொண்டதை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
ஆனால் இது குறித்து பேசுகையில் நடிகர் ஷாருகான் தரப்பினர்கள் ஷாருக்கானுக்கு குறைந்த அளவே அறிகுறிகள் இருந்ததாகவும் அதனால் தான் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் கூறி உள்ளார்கள் ஆனால் அவை மிக விரைவாக குணம் ஆகிவிட்டதாகவும் கூறி உள்ளார்கள்.
சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் அவர்கள் நடிகை நயன்தாராவுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி உருவாக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.