Shah Rukh Khan: ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வருகின்ற 7ம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் எனவே இதில் அஜித் குறித்து பேசி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அட்லீ இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜவான் படம் வருகின்ற 7ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது மேலும் ட்ரெய்லரும் வெளியாகி சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பியது. எனவே இதனையடுத்து சமீப காலங்களாக ஷாருக்கான் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ட்விட்டரில் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கு சுவாரசியமான பதிலளித்து வரும் ஷாருக்கான் Ask SRK என்ற ஹேர் ஸ்டைல் நடைபெற்று வந்த இந்த உரையாடலில் சென்னை குறித்தும், கோலிவுட் ஹீரோக்கள் பற்றியும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வந்ததை எப்படி உணர்கிறீர்கள்.. எந்த நடிகர்கள் நடிகைகளை சந்தித்தீர்கள்.. யாரையெல்லாம் சந்திக்க விருப்பம்.. என கேட்கப்பட்டது. அதற்கு ஷாருக்கான் கூறியதாவது, ரஜினி சார், தளபதி விஜய் இருவரையும் சந்தித்து விட்டேன். அஜித்தை தான் மீட் பண்ண முடியவில்லை விரைவில் அது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜவான் படத்தின் படப்பிடிப்பிற்காக சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் சென்னை வந்த நிலையில் அந்த சமயத்தில் விஜய்யை சந்தித்துள்ளார். அதேபோல் சூப்பர் ஸ்டாரையும் சந்தித்து பேசி உள்ளார். ஷாருக்கான், அஜித் இருவரும் இணைந்து கடந்து 2001ஆம் ஆண்டு வெளியான அசோகா என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.