இரவோடு இரவாக நயன்தாரா வீட்டிற்கு விசிட் அடித்த “ஷாருக்கான்” – என்ன காரணம் தெரியுமா

nayanthara-
nayanthara-

பாலிவுட் பாஷா ஷாருக்கான் இந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்து அங்கு முன்னணி நடிகராக வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடிப்பில் உருவான பதான் திரைப்படம்.. மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களில் நிச்சயம் ஆயிரம் கோடியை தொட்டு ஆர். ஆர். ஆர், கே ஜி எஃப் 2 போன்ற படங்களின் சாதனையை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இதைத்தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான்.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கிறது. இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேட் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருந்து திடீரென சென்னைக்கு விசிட் அடித்திருக்கிறார்.

அதுவும் வந்த உடனேயே நேற்று இரவு சென்னையில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு அவர் வந்திருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து இரட்டை குழந்தைகள் பிறந்தநாள் அந்த குழந்தைகளை பார்க்க தான் நடிகர் ஷாருக்கான் மும்பையில் இருந்து  சென்னையில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதை அறிந்த ரசிகர்கள் நயன்தாரா வீட்டு முன்பு ஏராளமான ஒரு குவிந்தனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. கார் வரை வந்து ஷாருக்கானை நயன்தாரா வழி அனுப்பி வைத்தார் இதோ அந்த வீடியோக்களை நீங்களே பாருங்கள்.