தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நடித்து வந்த பிரியாமணி ஆரம்பத்தில் குடும்பங்களைக் கவரும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டதால் இவருக்கான வரவேற்பு ஒருகட்டத்தில் விரிவடைந்தது மேலும் பல்வேறு படங்களில் அசாதாரமான நடிப்பை வெளிபடுதில் விருதுகளை குவித்தார் அதிலும் குறிப்பாக தேசிய விருது பருத்திவீரன் படத்தின் மூலம் இவருக்கு கிடைத்தது.
அதன் பிறகு இவருக்கு தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன இதனால் எந்த ஒருமொழி சினிமாவிலும் நிலையாக நிற்க முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் ஆள் அட்ரெஸ் தெரியாமல் போய்விட்டார்.
நடிகை ப்ரியாமணி பல வருடங்கள் கழித்து தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவருக்கு வெப்சீரிஸ் பக்கமும் நல்ல வாய்ப்புகள் உள்ளதால் சிறப்பானவற்றைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இதனால் இவர் இன்னும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரியாமணியும் zoom ஆப் மூலம் பேட்டி கொடுத்தார் அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அவர் கூறியது. நான் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் 1234 என்ற பாடலுக்கு அவருடன் நடனம் ஆடினேன்.
இந்தப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே நான் அங்கு வந்து விட்டேன் அங்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் ஃப்ரீயாக எனது வேலையை செய்தேன் அதுபோல ஷாருக்கானும் எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் அவர் அமைதியாகவும் அதேசமயம் எங்களுடன் ஜாலியாகவும் பழகினார் அது எங்களுக்கு இனிமையாக இருந்தது மேலும் அனைவரிடமும் அக்கறையாக நடந்து கொள்வார்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் நாங்கள் ஐ போனில் கேம் விளையாடுவது வழக்கம். அப்போது அவர் எனக்கு 300 ரூபாய் கொடுத்தார் அதை இப்பொழுது வரையிலும் நான் பத்திரமாக வைத்துள்ளேன் எனக் கூறி அவர்களை மிகவும் புகழ்ந்து பேசினார் மேலும் 1234 படத்தின் பாடல் 5 இரவுகளாக எடுக்கப்பட்டது அது ஒரு மிக சிறப்பான அனுபவம் என்றார்.