தமிழ் சினிமா உலகில் இருக்கும் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இதுவரை தோல்வியை சந்தித்ததே கிடையாது அந்த வகையில் இயக்குனர் அட்லீ. இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் முதலிலே இவர் ராஜா ராணி என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
அதன் பிறகு தளபதி விஜய் உடன் கைகோர்த்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் இதனால் அட்லியின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது. மீண்டும் தமிழ் சினிமாவில் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்டன இடையில் திடீரென இயக்குனர் அட்லீ ஷாருக்கானுக்கு ஒரு கதையை சொல்லி பாலிவுட் பக்கம் திசை திரும்பினார்.
தற்பொழுது ஷாருக்கானும், அட்லீயும் இணைந்து ஜவான் என்னும் படத்தில் பணியாற்றி வருகின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க ராணுவத்தை மையமாகக் கொண்டு படம் உருவாகி வருகிறதாம். ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் கைகோர்த்து யோகி பாபு, நயன்தாரா, பிரியாமணி, சானியா மல்கோத்ரா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க மறுபக்கம் ஜவான் படம் காப்பி அடிக்கப்பட்ட ஒரு கதை என கூறி கேஸ் போட்டுள்ளனர் இப்படி இந்த படத்திற்கு பல பிரச்சனைகள் வந்திருக்கின்ற நிலையில் தற்பொழுதும் ஒரு புதிய பிரச்சனை கிளம்பி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
ஜப்பான் படத்தை ஷாருக்கானின் Red chillies entertainment நிர்வனம் தயாரித்து வருகிறது இந்த நிலையில் படத்தின் பட்ஜெட்டை அதிகரிக்க வைக்கும் விதமாக பல செலவுகளை ஏற்படுத்தி இருக்கிறார் அட்லி இதனால் ஷாருக்கான் அட்லீ மீது கோபத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவரிடம் வீண் செலவு செய்யாதீர்கள் என ஷாருக்கான் கண்டித்து உள்ளாராம் இதனால் இருவருக்கும் இடையே சற்று மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.