தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டவர் இயக்குனர் அட்லீ. இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீ இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திய நாளிலிருந்து வெற்றிகளை கொடுத்து வந்தார்.
தமிழில் தளபதி விஜய்யை வைத்து அடுத்த ஹிட் படங்களை கொடுத்து இருந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திடீரென பாலிவுட் பக்கம் தனது திசையை திரும்பி உள்ளார் இயக்குனர் அட்லீ.
பாலிவுட் கிங்காங் என அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு ஒரு மிரட்டலான கதையை சொல்லினார். அது அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே உடனே ஓகே சொல்லி இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் எடுக்க தாமதமாகியது. சிறு இடைவேளைக்கு பிறகு ஷாருக்கான் படத்தில் இணைந்துள்ளார் தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக வருகிறார் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. இந்த படத்தில் ஷாருக்கான் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவருகின்றன இந்த படத்தில் ஒரு நடிகை மட்டும் இல்லை. இன்னும் இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது அந்த நடிகைகள் யார் யார் என்பது குறித்தும் பார்ப்போம்.
இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் இவர்களுடன் இணைந்து நடிகை பிரியாமணி, நடிகை சன்யா மல்ஹோத்ரா என்ற இரண்டு நடிகைகள் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.