ஒரு காலத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த சீரியல் தான் செம்பருத்தி இந்த சீரியல் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது இருந்தாலும் TRPயில் சன் டிவியை தொடர்ந்து இந்த சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நடித்துவரும் பல பிரபலங்களும் தற்போது படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.அந்த வகையில் பார்த்தால் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் ஷபானா இவர் இந்த சீரியலில் நடிப்பதால் மட்டுமே ரசிகர்கள் மற்றும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி செம்பருத்தி சீரியலை பார்த்து வருகிறார்கள்.
இவர் ஆர்யன் என்பவரை ஒரு சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்பதே நமக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது ஆனால் ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாகவே இவர்கள் காதலித்து வருவது நமக்கு தெரியாத விஷயம் ஆகும் சமீபத்தில் தான் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் அதேபோல் தற்போதும் இவர்களது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் ஷபானா தனது காதலனுடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் எப்பொழுது திருமணம் செய்யப் போகிறீர்கள் என கேள்விகளை எழுப்புவது மட்டுமல்லாமல் நீங்கள் கூடிய சீக்கிரம் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களை கைப்பற்றி நடிக்கும் அனைத்து திறமைகளும் உங்களுக்கு இருக்கிறது எனக் கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.