தற்பொழுதெல்லாம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது மேலும் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து புதிய சீரியல் அறிமுகப்படுத்தி வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் அந்த சீரியல்களில் புதுமுக நடிகர் அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் மிகவும் எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இது முழுக்க முழுக்க குடும்ப கதையினை மையமாக வைத்து வரும் சீரியல்களில் ஒன்று.
இந்த சீரியலில் அப்பாவி மனைவியை எப்படி தந்திரமாக ஏமாற்றுகிறான் என்றும் தனது அம்மா படிக்கவில்லை என்பதற்காக எப்படி இழிவாக நடத்துகிறார்கள் என்பதை மையமாக வைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் கோபி கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
கோபி தத்ரூபமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் கோபியின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் ஆரம்ப காலகட்டத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் ஆர்யன். இவர் தொடரில் இத்தொடரின் பாதியிலேயே நடிப்பதை நிறுத்திவிட்டார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஷபானாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இந்த சீரியலில் இருந்து விலகிய இவர் தற்பொழுது ஜீ தமிழில் புதிதாக அறிமுகமாகியுள்ள மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் கதாநாயகனாக நடிக்க களமிறங்கிவுள்ளார். இந்த தொடரை பற்றிய புகைப்படங்கள் வழியாக ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.