பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருப்பதன் காரணமாக வெகுவாக முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சீரியல்தான் செம்பருத்தி சீரியல். இந்த சீரியலை தமிழ்மொழி மட்டுமின்றி மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஷபானா என்ற நடிகை நடிக்க ஆரம்பித்தார். இவர் 2016 ஆம் ஆண்டிலிருந்து திரை உலகில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆரியன் என்ற நடிகருடன் காதல் திருமணம் நடைபெற்றது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் இந்த திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர்களின் உறவினர்கள் பெருமளவு கலந்துகொள்ளவில்லை.
ஆனால் இவர்களுடைய திருமணம் வீட்டை எதிர்த்து செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில்தான் பல்வேறு உறவினர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.மேலும் இவர்களின் திருமணம் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகா பேசாப்பட்டது.
சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஷாபனாவிடம் விவாகரத்து செய்தி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியது சமூக வலைத்தளபக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இவ்வாறு ரசிகர் கேட்ட கேள்விக்கு நமது நடிகை யூடியூப் பக்கத்தில் வரும் போலியான செய்திகளை நம்பும் ரசிகர்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் என்னை பொருத்தவரை சரியான மற்றும் உண்மையான தகவலை மக்களுக்கு கொடுக்க வேண்டும் அதில் கண்ணியமும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.