அதே வேகம் அதே தாகம்..! ஏழு வருடங்களுக்கு முன்பாக சேரன் சொன்ன கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க துடிக்கும் தயாரிப்பாளர்..!

cheran

seven years back say cheran story latest update: தமிழ் திரை உலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனது திறனை வெளிக்காட்டியவர் தான் சேரன். இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் தவமாய் தவமிருந்து, சொல்லமரந்தகதை, ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், பொக்கிஷம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள் பலவையும் இவர் தான் இயக்கி இருப்பார் ஆனால் சமீபகாலமாக இவர் திரைப்படத்தில் நடிப்பதும் இல்லை திரைப்படம் இயக்குவதும் கிடையாது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இப்படி ஒரு நிலையில் கல்லூரி விழா ஒன்றில் மனம் விட்டுப் பேசியுள்ளார்.

அப்பொழுது ஒரு கதையை மேடையில் கூறி இருந்தார் இவ்வாறு அவர் கூரிய கதையை பற்றி ரசிகர் ஒரு டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு சேரன் ஒரு கல்லூரியில் விருந்தினராக சென்று இருந்தார் அப்போது பலர் கேட்ட கேள்விக்கு மிக சிறப்பாக பதில் அளித்து வந்தார்.

அப்பொழுது ஒரு ஆசிரியை எழுந்து சேரனிடம் நீங்கள் படமாக்க நினைத்த ஏதாவது ஒரு கதை படம் எடுக்க முடியாமல் போயுள்ளதா அல்லது வருங்காலங்களில் நீங்கள் படமாக்க நினைத்துக்கொண்டிருக்கும் கதை ஏதேனும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் இவ்வாறு அவர் கேட்ட கேள்வியும் சேரன் அதற்கு கொடுத்த பதிலும் இன்றும் நினைவில் இருக்கிறது என ரசிகர் கூறியுள்ளார்.

cheran-2
cheran-2

அப்பொழுது சேரன் கூறிய கதை என்னவென்றால் அம்மா ஒரு நாட்டிலும் அப்பா ஒரு நாட்டிலும் அண்ணன் அக்கா தங்கை என எல்லோரும் வெவ்வேறு நாடுகளில் இருந்து கஷ்டப்படும் வலியையும் வேதனையையும் படமாக்க விரும்புகிறேன் என சேரன் கூறியிருந்தார்.

அது மட்டுமில்லாமல் நமது சேரன் நீங்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தால் நான் இயக்க ரெடி என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது மாநாடு தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி அவர்கள் நீங்கள் இந்த திரைப்படத்தை இயக்க முடிந்தால் செய்யுங்கள் என கூறி உள்ளார்.

cheran-1

அப்படி இல்லை என்றால் என்னிடம் அதற்கான பணம் வந்தவுடன் கண்டிப்பாக அந்த கதையை படமாக்க உங்களிடம் வருவேன் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த சேரன் என்னுடைய கதையை நினைவில் வைத்ததற்கு மிக்க நன்றி அன்று இருந்த அதே வேகமும்  தாகமும் இன்றும் எனக்குள் இருக்கிறது. இதனை யார் தீர்த்து வைப்பார் என்பது  தான் தெரியவில்லை என்று கூறியது மட்டுமல்லாமல் இது கண்டிப்பாக நடக்கும் என சேரன் கூறியுள்ளார்.