நடிகர் கார்த்திக் செய்த செயலால் அமெரிக்காவில் செட்டிலானா நடிகை.!

KARTHI 2
KARTHI 2

80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் கார்த்திக் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது மேலும் இவர் நடித்த காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் சாக்லேட் பாய் என்ற இடத்தினை பிடித்திருந்தார். பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் சமீப காலங்களாக வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் சின்ன ராஜா. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது மேலும் இந்த படத்தினை சித்ரா லட்சுமணன் இயக்கியிருந்தார் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கை தொடர்ந்து பிரியா ராமன், மணிவண்ணன், ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் முதலில் படபிடிப்புகள் ஆரம்பிப்பதற்கும் முன்பு நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணியில் பட குழுவினர்கள் இருந்து வந்த வருவார்கள். அப்பொழுது நடிகர் கார்த்திக் ஜோடியாக புதுமுக நடிகை போட்டால் நன்றாக இருக்கும் என இயக்குனர் தேட தொடங்கி உள்ளார். அந்த நேரத்தில் அமிதாப் பச்சன் ஒப்புதலில் இருந்த ஒரு ஹிந்தி நடிகையை தேர்ந்தெடுத்து சென்னைக்கு வர வைத்துள்ளனர்.

அப்பொழுது திடீரென நடிகர் கார்த்திக் சிறிது காலம் கழித்து படத்தை தொடங்கலாம் என ஆலோசனை கூற படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போனதாம் இதனால் கடப்பான மும்பை நடிகை படப்பிடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிட்டாராம். அதன் பிறகு தான் இந்த திரைப்படத்தில் செல்வமணியிடம் கூறி ரோஜாவை புக் செய்துள்ளார் சித்ரா லக்ஷ்மணன்.

இவ்வாறு இந்த படத்தில் நடிக்காமல் அமெரிக்கா சென்ற நடிகை வேறு யாருமில்லை விஸ்வரூபம் 1,2, உத்தம வில்லன் போன்ற படங்களில் கமலக்கு ஜோடியாக நடித்த பூஜா குமார் தான் சின்ன ரோஜா படத்தில் கார்த்திகை ஜோடியாக கமிட்டான நடிகை. அந்த படம் கரெக்டா நடந்திருந்தால் அப்பொழுது இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருப்பார்.