மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் மலையாளத்தில் முதன் முதலாக 2000 ஆண்டு சாயக்னம் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமலா என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலாக அறிமுகமானார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இவர் பல மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அப்படியே படிப்படியாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழில் முதல் முதலாக ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு மீண்டும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா நம்பீசன் ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் என்னதான் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு தமிழ் சினிமா மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை ஆனால் மலையாளத்தில் கொடிகட்டி பறந்து வந்தார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகியாகும் பல திரைப்படங்களில் பாடலை பாடியுள்ளார் அதன் பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா நம்பீசன் 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய சேதுபதி என்ற திரைப்படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டிப் போட்டார்.
சேதுபதி திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பல தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதனை தொடர்ந்து சைத்தான், சத்தியா, மெர்குரி, சீதகாதி அக்னிதேவி, நட்புன்னா என்னன்னு தெரியுமா. என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் என்னதான் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார் இந்நிலையில் இவர் தற்போது தமிழில் தமிழரசன் என்ற திரைப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
எப்படியாவது தமிழில் பட வாய்ப்பு பிடித்துவிட வேண்டும் என சமூக வளைதளத்தில் அடிக்கடி புடவை கட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கொசு வலை போன்ற ஜாக்கெட் புடவை கட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களை வைரலாகி வருகிறது.