Sethu movie Actress abitha : இயக்குனர் பாலாவின் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும், அந்த வகையில் பாலா இயக்கத்தில் விக்ரம் அபிதா சிவகுமார் ஸ்ரீமன் ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சேது, இந்த திரைப்படத்தில் விக்ரம் மனநோயாளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தின் கதை கல்லூரிகளில் படிக்கும் விக்ரம் தன்னுடன் படிக்கும் மாணவியான அபிதாவை காதலிக்கிறார். இந்த நேரத்தில் சேதுவின் எதிரிகளால் செய்து தாக்கப்பட்டு மனநோயாளி காப்பகத்தில் சேர்க்கிறார்கள், சேது விற்காக ஏங்கி இருக்கும் அபிதாவுக்கு வேறொரு மாப்பிள்ளையை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள்.
பின்பு அபிதா திருமணம் செய்து கொள்கிறாரா சேதுவிற்கு குணமடைந்ததா என்பதுதான் மீதிக்கதை இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக அபிதா நடித்திருந்தார், சேது திரைப்படத்திற்கு பிறகு அபிதா பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி நிறைந்த படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
சரியான பட வாய்ப்பு இல்லாததால் இப்படி சில மோசமான திரைப்படங்களில் நடிக்க நேர்ந்தது, அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் மீனா கதாபாத்திரத்தில் இவர்தான் முதலில் நடிக்க வேண்டியது ஆனால் சில காரணங்களால் அதுதான் நடக்க முடியாமல் போனது அப்படி அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்றால் இவரின் சினிமா வாழ்க்கையே திசைமாறி இருக்குமென கூறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்துடன் நான் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வந்து இருப்பேன் என கூறினார், பட வாய்ப்பு இல்லாததால் சில சீரியல்களிலும் நடித்து வந்தார், அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தன்னுடைய கணவருடன் வாழ்ந்து வருகிறார், இந்த நிலையில் தற்போது லட்சுமி ஸ்டோர் என்ற சீரியலில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.