அஜித்தின் “வலிமை” திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தது – யார் தெரியுமா.?

valimai
valimai

தமிழில் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் சினிமா உலகிற்கு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு பிரம்மாண்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். அந்த வகையில் இவர் நடிப்பில் வேதாளம், விவேகம், நேர்கொண்டபார்வை போன்ற ஹிட் படங்களைத் தொடர்ந்து கொடுத்து வந்த அஜித்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உருவாகி வந்த திரைப்படம்தான் வலிமை.  இந்த திரைப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெட்ச் வினோத் உடன் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை திரைப் படத்தை எடுத்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படி சிறப்பாக உருவாகி வந்த இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் பலரும் பேராதரவோடு எதிர்பார்த்து வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தினால் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டிருந்தே இருந்தன. ஒருவழியாக அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று திரையரங்கில் கோலாகலமாக வெளியாகியது.

வலிமை திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து இன்றுவரை திரைப்படத்தை காண திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். மேலும் முதல் நாள் வசூலில் தமிழில் இதுவரை வந்த திரைப்படங்களை பின்னுக்குத்தள்ளி முதல் நாள் வசூலில் முன்னிலையில் உள்ளது.

வலிமை படத்தின் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பின்னணி இசை அமைத்தது யார் என்பது பலரின் கேள்விக்குறியாக இருந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது யுவன் சங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் பின்னணி இசை அமைத்தது ஜிப்ரான் என பதிவிட்டுள்ளார்.