பழசா இருந்தாலும் பட்டையை கிளப்பிய சீரியல்கள்.. இதோ டிஆர்பி லிஸ்ட்

Serial
Serial

Tamil Serial: தமிழ் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். அப்படி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அந்த வகையில் மறுஒளிபரப்பு ஆகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவை முதன் முறையாக ஒளிபரப்பாகும் பொழுதும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு இதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அந்த சீரியல்கள் ஆயிரம் எபிசோட்களை கடந்தும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இதனை சமீப காலங்களாக மறுஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான  கோலங்கள், நாதஸ்வரம், தெய்வமகள், தென்றல், அழகி போன்ற தொடர்கள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது.  இவ்வாறு அப்போதிலிருந்து தற்பொழுது வரையிலும் சன் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது.

இவ்வாறு 10 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த சீரியல்களை ஒளிபரப்பானாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் மறுஒளிபரப்பு செய்யப்படும் பொழுது சன் தொலைக்காட்சி ஒளிபரப்பான சீரியல்கள் கலைஞர் மற்றும் கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியல் டிஆர்பி-யில் அதிகபட்சமாக 1.12 புள்ளிகளைப் பெற்று முன்னணி வகித்தது. இதனை அடுத்து திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடர்  0.54 புள்ளிகளை பெற்று   டிஆர்பி-யில் அடுத்த இடம் பிடித்தது. மேலும்,

வி.சி. ரவி இயக்கிய அழகி தொடர் – 0.47 டிஆர்பி புள்ளிகள்

எஸ்.குமரன் இயக்கிய தெய்வமகள் – 0.23 டிஆர்பி புள்ளிகள்

எஸ்.குமரன் இயக்க தென்றல் தொடர் – 0.43 டிஆர்பி புள்ளிகள்