டிஆர்பி-யில் அடிச்சு தூக்கிய விஜய் டிவி.. சரிந்த சன் டிவி சீரியல்.. விட்டா இந்த சீரியல் முதல் இடத்தையே பிடிச்சிடும் போல…

serial trp rating
serial trp rating

சன் டிவி, விஜய் டிவி , ஜீ தமிழ் ஆகிய முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களின் அடிப்படையில் டிஆர்பி லிஸ்ட் வெளியிடப்படுகிறது அந்த வகையில் இந்த வருடத்தின் 19 ஆவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் லிஸ்டை இங்கே காணலாம். அதிலும் இந்த வாரம் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிஆர்பி யில் சரிவை சந்தித்துள்ளது. அதன் தரவரிசையில்  மாற்றம் ஏற்பட்டு முன்னிலையில் இருந்த சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிங்க பெண்ணே சீரியல் முதல் இடத்தில் இருக்கிறது இந்த சீரியல் 8.81 புள்ளிகள் பெற்று தங்களுடைய முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் 8.38 புள்ளிகளை பெற்று கயல் சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வழக்கம்போல் எதிர்நீச்சல் சீரியல் 7.54 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் நான்காவது இடத்தில் 7.48 புள்ளிகளைப் பெற்று வானத்தைப்போல சீரியல் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஐந்தாவது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 7.15 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அதேபோல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சுந்தரி சீரியல் 6.62 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏழாவது இடத்தில் 6.25 புள்ளிகளை பெற்று பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்றுள்ளது. எட்டாவது இடத்தில் மல்லி என்ற சீரியல் 5.69 புள்ளிகளை பெற்றுள்ளது ஒன்பதாவது இடத்தில் பாணன் டோர் சீரியல் 5.57 புள்ளிகளை பெற்றுள்ளது பத்தாவது இடத்தில் ின்ன மருமகள் சீரியல் 5.35 புள்ளிகளை பெற்றுள்ளது..