வேல ராமமூர்த்தி வந்தும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இந்த நிலைமையா.! உள்ளே புகுந்த விஜய் டிவி இந்த வார டிஆர்பி ரேட்டிங்.!

this week trp rating

Serial trp rating : சினிமாவை விட சின்னத்திரைக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் வாரவாரம் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி கொண்டிருக்கிறது இதில் மக்களை கவர்ந்த சீரியல் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று வருகிறது.

பெரும்பாலும் சீரியலில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் சீரியலாக பார்க்கப்படுவது சன் தொலைக்காட்சி சீரியல்கள் தான் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சி சீரியலுக்கு ஓரளவு ரேட்டிங் இருக்கும். சன் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி இரண்டுக்குமே பலத்த போட்டி இருக்கும்.

Ethirneechal : என்னாது இந்த குட்டி குழந்தைதான் எதிர்நீச்சல் பிரபலமா.! படத்திலும் நடித்துள்ளாரா.! எந்தெந்த திரைப்படம் தெரியுமா.?

என்னதான் முன்னணி சேனலுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பினாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சற்று டிஆர்பி யில் பின்னடைவில் தான் இருந்து வருகிறது இந்த நிலையில் 39 வது வாரத்திற்கான சீரியல் டிஆர்பி ரேட்டிங் தற்பொழுது வெளியாகி உள்ளது.

kayal
kayal

கயல்: சைத்ரா ரெட்டி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது அதிரடியாக 10.53 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் வந்துள்ளது.

எதிர்நீச்சல்: கடந்த சில வாரங்களாகவே எதிர்நீச்சல் சீரியல்தான் முன்னிலையில் இருந்து வந்தது ஆனால் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மறைவுக்குப் பிறகு சற்று சறுக்களை சந்தித்துள்ளது எதிர்நீச்சல் இந்த நிலையில் 10 புள்ளி 18 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது. கயல் சீரியல் எதிர்நீச்சல் சீரியலை ஓவர் டக் பண்ணி முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ethirneechal trp rating

வானத்தைப்போல: அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் வானத்தைப்போல இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக நான்காவது இடத்தில் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் 10.07 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தாவியுள்ளது.

சுந்தரி : கடந்த சில வாரங்களாகவே மூன்றாவது இடத்தில் இருந்து வந்த சுந்தரி சீரியல் இந்த வாரம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் சுவாரசியம் கொஞ்சம் குறைந்ததால் தான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என கூறப்படுகிறார்கள்.

இனியா : ஆலியா மானசா நாயகியாக நடித்து வரும் இனியா சீரியல் கடந்த சில வாரங்களாக ஆறாவது இடத்தில் இருந்து வந்தது ஆனால் இந்த வாரம் ஐந்தாவது இடத்திற்கு 8.68 புள்ளிகள் உடன் முன்னேறி உள்ளது.

டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் வேல ராமமூர்த்தி.. கடுப்பில் சன் டிவி பிரபலங்கள்.!

மிஸ்டர் மனைவி : ஏழாவது இடத்தில் இருந்து வந்த மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரம் 8.67 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியலாக பார்க்கப்படும் சிறகடிக்க ஆசை கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்து வந்தது ஆனால் இந்த வாரம் 8.16 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது.

அதேபோல் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.56 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த வாரம் பத்தாவது இடத்தில் இருந்து வந்த ஆனந்த ராகம் சீரியல் 6.82 புள்ளிகள் பெற்று இந்த வாரம் ஒன்பதாவது இடத்தை தக்க வைத்துள்ளது அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஆகா கல்யாணம் 6.57 புள்ளிகள் பெற்று 10-வது இடத்திற்கு தற்பொழுது முன்னேறியுள்ளது.