சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி வெற்றி கொடியை பறக்க விட்ட சிறகடிக்க ஆசை.. இதோ முழு டிஆர்பி லிஸ்ட்..

பொழுதுபோக்கு என்றாலே ஒரு காலத்தில் சினிமா என்று இருந்தது ஆனால் சமீப காலமாக பொழுதுபோக்கு என்றாலே சீரியல் என்ற நிலைமை மாறிவிட்டது அதிலும் சினிமாவில் நடிக்கும் பிரபலங்களை காற்றிலும் சீரியலில் நடிக்கும் பிரபலம் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள் அதனால் பலரும் சீரியலில் நடிப்பதை அதிகமாக விரும்புகிறார்கள்.

சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மிகவும் பிரபலமடைந்துள்ளது சமூக வலைதளத்தை பார்த்தாலே உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கும் நிலையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மத்தியில் பலத்த போட்டி டி ஆர் பி இல் நடைபெற்று வருகிறது அந்த வகையில் சீரியலின் மன்னனாக திகழ்ந்து வருவது சன் டிவி தான் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

அதற்குப் போட்டியாக விஜய் தொலைக்காட்சியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட்டை வெளியேற்றி வருகிறார்கள் அந்த வகையில் கிராமப்புறம் நகர புறம் என அனைத்து இடங்களிலும் அதிக பார்வையாளர்களை கடந்த சீரியல் என்ற லிஸ்ட் டிஆர்பி மூலம் வெளியிடப்படுகிறது அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி லிஸ்ட் வெளியாகியுள்ளது இதில் சிறகடிக்க ஆசை சீரியல் சன் தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி முன்னேறி வருகிறது.

முதல் இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்  சிங்க பெண்ணே சீரியல், இரண்டாவது இடத்தில் கயல் சீரியலும், மூன்றாவது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலும், நான்காவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியலும், ஐந்தாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் இடம் பிடித்துள்ளது இப்படி முதல் ஐந்து சீரியல் டிஆர்பி லிஸ்ட் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.