பேரன், பேத்தி பாக்குற வயசுல ரொமான்ஸ் காட்சிகள் தேவைதானா.! தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த சீரியல் சனா..

sana-actess
sana-actess

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சனா தற்பொழுது வரையிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகைகளுக்கு அம்மாவாகவும், சகோதரியாகவும், பாட்டியாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சனா தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் ரவி தேஜா கிருஷ்ணாவின் படத்தில் பிரம்மானந்தின் மனைவியாக நடித்திருந்தார்.

இவ்வாறு தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நடித்து வரும் இவர் மேலும் தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் பொன்மகள் வந்தாள் என்ற சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார் மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கா.பே ரணசங்கம் படத்தில் கலெக்டர் கதாபாத்திரத்தில்  நடித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் அஹா ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் மெட்ரோ காதல் என்ற சீரியலில் மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு துணிச்சல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் சில காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பலவிதமான விமர்சனங்களை தந்துவரும் நிலையில் அந்த விமர்சனங்களுக்கு நடிகை சனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் நான் மெட்ரோ காதல் சீரியலில் நடித்திருப்பதற்கு முக்கியமான காரணம் இயக்குனர் கருணா குமார் மற்றும் எழுத்தாளர் காதர் பாபு அவர்கள்தான் அவர்கள் சீரியலின் கதையை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது அது என்னுடைய குடிகார கணவன் தன்னுடைய மனைவியைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அவளை துன்புறுத்துகிறார்.

web serial
web serial

இதனால் அந்த பெண் ஆண்களை வெறுக்கிறாள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு பையன் அறிமுகமாகிறான் அவனுடன் தவறு செய்ய விரும்பாவிட்டாலும் தவறு செய்ய வேண்டும் என்ற நிலையில் ஒரு பெண் தன்னுடைய ஆசைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதனையும், கணவன் தன்மீது கவனம் செலுத்தாவிட்டால் அந்தப் பெண் வீட்டில் எப்படி நடந்து கொள்வார் என்பதை தத்துரூபமாக தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் அறிவார்கள் இவ்வாறு சீரியலின் கதை உண்மையான நிகழ்வுகளுக்கு நெருக்கமாக இருந்ததனால் தான் நான் நடித்தேன்.

sana
sana

இதன் மூலம் சீரியலை பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என செய்ய மற்றவர்கள் உணர்வது மிக முக்கியம் என நினைத்தேன் உண்மையான, எதார்த்தமான, கடினமான கதாபாத்திரமாக இருந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்னுடைய கதாபாத்திரம் ஆழமாக இருக்கிறது என்பதை நான் தான் இப்படி விமர்சனங்கள் வருகிறது கதையைக் கேட்ட பிறகு நானும் அப்படித்தான் உணர்ந்தேன். அதனால் தான் இந்த கதாபாத்திரம் வேண்டாம் என மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை சனா.