விஜயுடன் ஒரு தடவையாவது நடித்து விட வேண்டும் ஆசையை வெளியே சொன்ன பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்.! யார் தெரியுமா.?

vijay-
vijay-

தளபதி விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்த வருகிறார் அந்த வகையில் தற்போது தனது 66-வது திரைப்படம் ஆன வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தினை வம்சி இயக்கி வருகின்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றன

படத்தில் விஜயுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் அந்த வகையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர் விஜயின் தீவிர ரசிகை விஜய்யுடன் நடிப்பது நீண்ட நாள் கனவாக வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து தனது 67வது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த நிலையில் முன்னணி நடிகைகள் முதற்கொண்டு சீரியல் நடிகைகள் வரை விஜய் உடன் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றன.

ஆனால் அந்த வாய்ப்பு என்னவோ ஒரு சில நடிகைகளுக்கு தான் கிடைக்கும். அப்படி தற்போது ஒரு சீரியல் நடிகை ஒருவர் விஜயுடன் நடிப்பதை தனது ஆசையாக தெரிவித்துள்ளார். ஆம் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலம்

தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது  இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கண்மணி எனக்கு விஜய்யுடன் நடிப்பது ஆசை மற்றும் கனவு என தெரிவித்துள்ளார்.