நடிகர் விவேக் இன்று அதிகாலை 4:45 மணி அளவில் இயற்கை எய்தார். நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள்,ரசிகர்கள் என்று அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை விருந்தபக்கம் விவேக்கின் வீட்டில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு சில மணித்துளிகளுக்கு முன்புதான் காவல்துறை அதிகாரிகளின் மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த வகையில் விவேக்கின் இளைய மகளான தேஜஸ்வினி இறுதிச் சடங்கை செய்து முடித்தார்.
இந்நிலையில் பலர் விவேக்கிற்க்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சில சின்னத்திரை சீரியல் பிரபலங்களும் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியல் செட்டில் அனைவரும் மவுனமாக இருந்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.