நடிகைகளைப் போல் மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலங்கள்.! அதுவும் அந்த நடிகை போல இருக்கிறாரே இவர்.!

pandiyan stores 1
pandiyan stores 1

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலத்திலிருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி  நாடகமாக விளங்குவது பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து இயக்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க இதில் முல்லை மற்றும் குமரன் கேரக்டர் தான் மிகவும் ட்ரெண்டிங்காக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளது.

தற்பொழுது சித்திராவின் மறைவிற்குப் பிறகு பாரதிகண்ணம்மா சீரியல் நடித்த காவியா நடித்துவருகிறார். இவ்வாறு குடும்ப கதை மற்றும் காதலை மையமாக வைத்து இயக்கப்படுவதால் ரசிகர்கள் பெரும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் தற்பொழுது உள்ள நான்கு அண்ணன், தம்பிகளும் தங்களது  பிளாஷ்பேக் கதையை சொல்ல உள்ளார்கள். அந்த வகையில் சில குழந்தை நட்சத்திரங்களும் இந்த சீரியலின் மூலம் அறிமுகமாக உள்ளார்கள். எனவே இதனை பற்றிய புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிக்கும் அனைத்து நடிகர்,நடிகைகளும் வெளியில் எங்கோ சென்று உள்ளார்கள். அதில் அனைத்து நடிகர்,நடிகைகளும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

pandiyan stores 2
pandiyan stores 2