தற்போது உள்ள பல தொசைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை இயக்குவதிலும்,அதில் எந்த நடிகர், நடிகைகள் நடித்தால் சரியாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பூவே பூச்சூடவா. இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. இவர் இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதே சீரியலில் ரேஸ்த்மாவிற்கு கொழுந்தனாராக தொகுப்பாளர் மற்றும் நடிகராக மதன் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் ரேஸ்மா மற்றும் மதன் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
எனவே தற்பொழுது வெள்ளித்திரையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எவ்வளவு பிரபலமோ அதே போல சின்னத்திரையில் மதன் மற்றும் ரேஷ்மாவின் காதல் தான் பிரபலமாக இருந்து வருகிறது.
இவ்வாறு புதிய காதலர்களான இவர்கள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்வது மற்றும் சோஷியல் மீடியாவில் இருவரும் ஒன்றாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற பலவற்றை செய்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.