நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக சிறந்த இயக்குனர்களிடம் கதையை கேட்டு நடிப்பதால் அவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன. அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை, வலிமை திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது.
இதனை தொடர்ந்து இந்த வருடமே இன்னொரு படத்தை கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். AK 61 படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கமிருக்க அஜித் பற்றிய செய்திகள் அண்மைகாலமாக வெளிவருகின்றன அப்படி ஒரு செய்தி தான் தற்போது கிடைத்துள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் முதல் பக்கத்தை தொடர்ந்து இரண்டாவது பாகமும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரம் சக்திக்கு பெரிய அம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நந்தினி இவர் சீரியல்களின் தாண்டி வெள்ளித்திரையிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அதில் ஒன்றாக அஜித்தின் வேதாளம் படத்திலும் நடித்துள்ளார் அஜித் குத்து பட்டு ஹாஸ்பிடலுக்கு வந்திருப்பார் அந்த சீனில் நர்சாக நந்தினி நடித்தாராம். அஜித்தை கிட்டக்க பார்த்து அழகில் மயங்கி விட்டாராம் புசுபுசுவென கன்னம் பார்ப்பதற்கு சூப்பராக இருந்தார்.
ஆனால் நந்தினிக்கு அதைக் கிள்ளி விடவேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது ஆனால் பக்கத்தில் இருந்த அசிஸ்டண்ட் இயக்குனர் அப்படியெல்லாம் பண்ண வேண்டாம் மேடம் என கூறியுள்ளாராம் இல்லை என்றால் அஜீத்தை பார்த்து கிள்ளி இருப்பேன் என கூறினார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் நந்தினோ அழகாக சொல்லி இருந்தார்.