சினிமா உலகில் முன்பு நடிகைகள் அனைவரும் நடித்துக் கொண்டிருக்கும்போது பட வாய்ப்பு குறையும் பொழுது சின்னத்திரையில் நுழைவார்கள், இது வழக்கமான ஒன்றுதான் ஆனால் இப்பொழுது முதன்முதலில் சீரியலில் அறிமுகமாகி பிரபலமான பின்பு சரியான வாய்ப்புகள் அமையும் பொழுது சினிமாவில் நுழைந்து விடுகிறார்கள்,.
இது சமீப காலமாக ட்ரெண்டாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்தின் மூலம் சில வீடியோக்களை வெளியிட்டு சிலர் நடிகையாக முன்னேறுகிறார்கள், அந்த வகையில் ஏர் ஹாஸ்டெஸ் பெண்ணாக இருந்து மாடலிங் என சின்னத்திரையில் நுழைந்து வெள்ளித்திரையில் வலம் வரும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது அது சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனுக்கு தான் கிடைக்கும்.
இவர் அண்மையில் தெலுங்கு திரைப்படமான மீக்கு மாத்ரமே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தற்பொழுது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார், இந்த திரைப்படம் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியானது இதனை தொடர்ந்து தமிழில் வெள்ளித்திரையிலும் படவாய்ப்புகள் அமைந்து வருவதாக வாணிபோஜன் சொல்லுகிறார்.
முதல் முதலில் சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹாஸ்டெஸ்ஸாக இருந்து அதன் பிறகு மாடல் டிவி சீரியல் என படிப்படியாக முன்னேறினார் அதன்பிறகு அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார், பின்பு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது, இருந்தாலும் இவர் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் டீ ஷர்ட்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.