லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அனைத்து நடிகைகளும் தங்களது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ராஜா ராணி சீரியலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வைஷாலி தனிகா. இவர் ராஜா ராணி சீரியலில் ஹீரோவான கார்த்திக்கு தங்கையாக நடித்து பிரபலமடைந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.
அந்த வகையில் விஜய் டிவியில் மாப்பிள்ளை சீரியலில் ஸ்ரீஜாவின் தங்கையாக நடித்திருந்தார் இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் முதலில் மாலை நேரம் என்ற குறும்படத்தின் மூலம் தான் திரைவுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.அதன் பிறகு இதனை தொடர்ந்து கதகளி என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
சர்க்கார், ரெமோ, சீமராஜா பிரபுதேவாவின் எங் மங் சங் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் பல புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.