சமீபகாலமாக வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை கொடுத்து மக்கள் மற்றும் இல்லத்தரசிகளை மகிழ்வித்து வருகின்றன. அந்த வகையில் மக்களின் பேவரட் சீரியல்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்.
இந்த தொடர் கூட்டுக்குடும்பம் மற்றும் அண்ணன் தம்பி பாசம் போன்றவற்றை மையமாக கொண்டு எடுத்து வரப்படுகிறது. மேலும் இந்த சீரியல் விஜய் டிவியின் டிஆர்பி யிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா பிரபல முன்னணி சின்னத்திரை நடிகை ஆவார். மேலும் இவர் வெள்ளி திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜ் உடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக பணியாற்றியதன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமடைந்தவர் சுஜிதா. பின்பு இவர் முன்னணி நடிகர்களான அஜித் கமல் போன்றவர்களின் படத்திலும் சுஜிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இப்படி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரை பாண்டியன் ஸ்டோர் தனம் கதாபாத்திரமே இவரை பெரிதும் பிரபலமடைய வைத்தது. மேலும் நடிகை சுஜிதா அவர் இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் அண்மையில் கூட இவர் வயதான பாட்டி போல் வேடம் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக பார்க்கப்பட்டது அதனை அடுத்து தற்போது இவர் ஏஞ்சல் போல் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.