சம்பளம் வாங்குவதில் சின்னத்திரை நடிகர்,நடிகைகள் அனைவரையும் ஓவர்டேக் செய்த பாண்டியன் ஸ்டோர் தனம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

pantiyan stores
pantiyan stores

வெள்ளித்திரையில் நடித்து தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாத காரணத்தினால் சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகியாக நிலைத்து நிற்க முடியவில்லை என்பதன் காரணமாக சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை சுஜாதா.

இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து ஏராளமான எபிசோடுகளை கடந்து வெற்றி பயணத்தை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது.

ஏனென்றால் தற்போது கூட்டு குடும்பம் என்பதை மறந்து அனைவரும் தனி குடும்பத்தில் வாழ்ந்து வருகிறோம் எனவே தற்பொழுது கூட்டுக் குடும்பம் என்பது எப்படி இருக்கும் என்பதை கூகுளில் சர்ச் பண்ணி பார்க்கும் அளவிற்கு நம்மளுடைய நிலைமை தள்ளப்பட்டுள்ளது.

எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதைக் கூறும் வகையில் மூன்று அண்ணன் தம்பிகளின் பாசம், அம்மா போன்ற பாசத்தை செலுத்தும் அண்ணியின் அளவு கடந்த அன்பு மற்றும் மருமகளின் ஒற்றுமை,குடும்பத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் வில்லி மற்றும் வில்லன்கள் போன்ற தத்துரூபமாக காட்டும் வகையில் அனைத்து நிகழ்ச்சிகளும் அமைந்துள்ளது.

இவ்வாறு இப்படிப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட இந்தியாவில் மட்டும் 8 மொழிகளில்  ஒளிபரப்பாகி வருகிறது.ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று முன்னிலை வகித்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் சுஜாதா மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் சம்பள பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் ஒரு நாளைக்கு ரூபாய் 12 ஆயிரமும்,  தம்பி கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஜீவா ஒரு நாளைக்கு 10 ஆயிரமும்,அவரது மனைவி மீனா ஒரு நாளைக்கு ரூபாய் 8000,இரண்டாவது தம்பி கதிர் ஒரு நாளைக்கு 10 ஆயிரமும், அவரது மனைவி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா ரூபாய் 8000,கடைசி தம்பி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் 6 ஆயிரமும் வாங்குவதாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து இந்த சீரியலில் அதிகப்படியாக ஒரு நாளைக்கு தனம்  ரூபாய் 17 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. சுஜாதா கிட்டத்தட்ட நூறு திரைப்படங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகையாகவும், குழந்தை நட்சத்திரமாகவும் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.