திடீரென மரணமடைந்த தனது கணவர் குறித்து உருக்கமான தகவல்களை பகிர்ந்து வரும் சீரியல் நடிகை ஸ்ருதி..

sruthi 1
sruthi 1

Sruthi Shanmuga Priya : சின்னத்திரை நடிகை ஸ்ருதியின் கணவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சிடைந்துள்ளனர். தனது கணவரின் இறப்பு செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் தான் ஸ்ருதி சண்முகப்பிரியா.

நாதஸ்வரம் சீரியல் மூலம் நல்ல ரீச்சை பெற்ற இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அப்படி கடந்த ஆண்டு தனது காதலர் அரவிந்த் சேகரை பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். கடந்த மே மாதம் அரவிந்த் சேகர் ஸ்ருதி இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இவ்வாறு திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே கடந்து இருக்கும் நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக அதிர்ச்சிடைந்துள்ளனர். மேலும் ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார். அரவிந்துக்கு 30 வயதே ஆகும் நிலையத்தில் திடீரென இவ்வாறு நடந்தது பெரும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மரணம் குறித்து பலரும் ஏராளமான வதந்திகளை பரப்பி வரும் நிலையில் இதற்கு விளக்கம் அளித்த ஸ்ருதி தனது கணவர் உடற்பயிற்சி நிபுணர் எனக் கூறி வருகிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது உடற்பயிற்சி செய்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. அவர் ஒரு சிவில் இன்ஜினியர் பிட்னஸ் மீது கொஞ்சம் ஆர்வம் உடையவர் aவ்வளவுதான் என கூறியுள்ளார்.

மேலும் ஸ்ருதி என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார். என பல தகவல்களை பகிர்ந்த நிலையில் மேலும் தனது கணவர் அரவிந்த் சேகர் உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் உன் உடல் மட்டுமே என்னை விட்டு பிரிந்துள்ளது. உன் உயிர், உன் மனம், என்னை அரவணைக்கும் உனது பாதுகாப்பு எல்லாமே என்னை சுற்றி தான் உள்ளது.

நாளுக்கு நாள் உன் மீது எனக்கு அன்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது நாம் இருவரும் ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை உருவாக்கி விட்டோம் அதை எப்பொழுதும் என்னிடத்தில் வைத்துக் கொள்வேன் உன்னை எப்பொழுதும் என் அருகில் உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இவருடைய பதிவு வைரலாக ரசிகர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.