தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் எல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள். இவர்களை தினமும் தவறாமல் டிவியில் பார்ப்பதனாளோ என்னவோ ரசிகர்களுக்கு எளிதில் அவர்களை பிடித்து விடுகிறது.
அந்த வகையில் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று இரண்டிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரையில் தனது முத்திரையைப் பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.
சின்னத்திரையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் முதலில் சன் டிவியின் மூலம் தான் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து விஜய், ஜெயா, ஜெமினி, ஜீ தமிழ் என்று அனைத்து பிரபல தொலைக்காட்சிகளிலும் நடித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதுவரையிலும் சின்னத்திரையில் 25 சீரியல்களும், வெள்ளித்திரையில் இரண்டு படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறு மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் சோசியல் மீடியா தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீப காலங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்திவந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் கணவருடன் கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.