பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை.!

bigg-boss
bigg-boss

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் ஐந்தாண்டு காலங்களாக தமிழில் ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஐந்து வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

மேலும் ரசிகர்களின் கோரிக்கையின் படி பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடி  வழியாக 24 மணி நேரமும் நடப்பதை வெளியிட்டு இருந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசனை தொடங்க முதற்க்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து வரும் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய பிரபலங்களை அறிமுகப்படுத்துவதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் சிம்புவை காதலிப்பதாக கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இளம் நடிகை ஒருவர் கலந்து இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது.ஏனென்றால் கமலஹாசன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் அவரால் தொகுத்து வழங்க முடியவில்லை இதன் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தான் தொகுத்து வழங்கினார்.

Srimathi
Srinithi

எனவே 6 சீசனாரை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது. போன சீசன்னில் ஏராளமான மாடல்கள் இருந்ததால் டிஆர்பி-யில் சரிவு ஏற்பட்டிருந்தது எனவே இந்த சீசனில் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காக போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார்களாம்.

அந்த வகையில் தொடர்ந்து பேட்டியில் சிம்புவை நான் காதலிப்பதாக கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய ஶ்ரீ நிதி இந்நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இவர் தொடர்ந்து சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.