ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் மகா சங்கமத்தில் புதிதாக ஒன்றிணைந்த பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்

rajarani bharthikannama
rajarani bharthikannama

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து பல கோடி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். தற்போது இந்தியாவிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் முதலிடம் வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது லாக் டவுனால் பல தொழில்கள் முடங்கி உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது உள்ள அனைத்து சீரியல்களின் படப்பிடிப்புகளும் வேறு மாநிலத்தில் படம் பிடிப்பு நடைபெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் வெவ்வேறு கதை உள்ள ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா இந்த இரண்டு சீரியல்களின் இயக்குனர் ஒரே இயக்குனர் என்பதால் இரண்டு சீரியல்களிலும் ஒன்றிணைத்து இரண்டாவது முறையாக மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் இந்த சீரியலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஒரு ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. அதோட ஒரு சில நடிகர், நடிகைகலின் காட்சியை வீட்டிலிருந்தே படமாக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாகப் ஆலியா மானசா  இவருக்கு ஜோடியாக சித்துவும் நடித்து வருகிறார்.

நடிகர் சித்து இந்த சீரியலுக்கு முன்பு கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியலில் நடித்து வந்தார். அந்த வகையில் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா என்பவர் நடித்து வந்தார். இந்த சீரியலில் இவர்கள் இருவரும் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.

இதுகுறித்து இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறி உள்ளார்கள்.இப்படிப்பட்ட நிலையில் ஸ்ரேயா தனது காதலரான  சித்துவுடன் ராஜா ராணி 2 சீரியலின் படப்பிடிப்பிற்கு ஹைதராபாத் சென்றுவுள்ளார். அங்கு பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2  சீரியல் நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

sreya 1
sreya 1