பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரை பிரபலமடைந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் நடனத்தில் ஆர்வம் உடையவராக இருந்ததால் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இதில் இவரின் நடனமாடிய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவ்வாறு பிரபலமடைந்த இவர் தமிழ் இளைஞர்களின் கனவுக் கன்னியாக உருவெடுத்தார்.
இதன் மூலம் இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் இவர் பாலாஜி முருகதாஸ் பின்னாடியே சுற்றியதால் இவரை பலரும் வெறுத்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் இவர் வெளியேறுவதற்கு முதல் வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்க பெண் என்ற பெயருடன் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஷிவானி ஒரு பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்க பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறி இருந்தார். ஆனால் திடீரென்று கொரோனாவின் இரண்டாவுது அலை மிகவும் வேகமாக பரவியதால் படப்பிடிப்புகள் நடக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷிவானி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் சிப்புவின் போட்டுத்தாக்கு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.