தற்பொழுது சினிமாவில் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு தாங்கள் சளைத்தவரல்ல என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியல் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஆனால் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் பலர் ஷிவானியின் மீது கோபப்பட்டு வந்தார்கள்.
அதன் பிறகு இந்த நிகழ்ச்சிக்கு ஷிவானியின் அம்மா வந்த பொழுது ஷிவானியை மிகவும் கண்டித்ததால் அதனை புரிந்து கொண்ட ஷிவானி மீண்டும் இருந்த ஒரு வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்க பெண் என்ற பெயருடன் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி பங்குப் பெற்ற அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ஷிவானியும் ஒரு பேட்டியில் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஷிவானி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏனென்றால் சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.