சின்ன தல-யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷிவானி.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..

shivaninarayanan1

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம் மற்றும் ஜி தமிழ் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

பிறகு சின்னத்திரையிலிருந்து நடிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வந்தார். இதன் மூலம் ஷிவானிக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தார்கள்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக  கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். பொதுவாகவே பிக்பாஸில் கலந்து கொண்ட அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அதுபோலவே ஷிவானியும் ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது சென்னை ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் இவரை அன்புடன் சின்ன தல என்றுதான் அழைப்பார்கள்.

இந்நிலையில் இவர் சென்னை வந்துள்ளதால் சமீபத்தில் பல பிரபலங்கள் இவரை நேரில் சென்று இவருடன் புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சில மணிநேரங்களுக்கு முன்பு சிவாங்கி சின்ன தலையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

ssss
ssss

இவரை தொடர்ந்து தற்போது ஷிவானியும் சின்ன தலை உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இவருக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது.