தள தளன்னு இருந்த சீரியல் நடிகை ஷிவானியா இப்படி மாறியுள்ளார்!! வைரலாகும் புகைப்படம்.!

shivani

Serial actress shivani narayanan photo:சின்னத்திரையில் இளம் நடிகைகளில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர்களில் ஒருவர் ஷிவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். இந்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கடைக்குட்டிசிங்கம் என்ற சீரியலில் நடித்து இருந்தார்.சீரியலில் இரண்டு மூன்று மாதங்களில் நடித்திருந்த நிலையில் திடீரென அதிலிருந்து விலகி ஜீ தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் கமிட்டாகி தற்போது நடித்து கொண்டு வருகிறார். சீரியலில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து கொண்டு அவ்வப்போது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்திவந்தார்.

ஷிவானி தற்பொழுது துரோகி என்ற பெயரில் தனது பழைய புகைப்படத்தையும் இப்பொழுது இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார். பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த இவர் இப்படி ஆளே தெரியாமல் மாறி உள்ளார் என கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

shivani
shivani