பல நடிகைகள் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துவிட்டு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் நடிப்பதை தொடங்குகிறார்கள்.
அந்தவகையில் வெள்ளித் திரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி. இவர் சித்து பிளஸ் 2 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வெற்றி தராதவில்லை. பெரும் தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து பில்லா பாண்டி, கட்டப்பாவ காணோம் உட்பட இன்னும் சில படங்களில் நடித்து இருந்தார். எந்த படமும் பிரபலத்தை தராத காரணத்தினால் சின்னத்திரைக்கு தாவினார்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தாழம்பூ மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவருடைய கணவர் நந்தா ஜீ தமிழ் ஒளிபரப்பாகிவரும் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாந்தினி தன் கணவருக்கு முத்தமிடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.