பொதுவாக வெள்ளித்திரை நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு சில ஆண்டுகளாகும் ஆனால் சின்னத்திரை நடிகைகள் அப்படி கிடையாது அறிமுகமான முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து எளிதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுவார்கள்.
அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் தான் எனவே தற்போது உள்ள தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான சீரியல்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இவ்வாறு பிரபலமடைந்த சீரியல் நடிகைகளுக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ஆனால் பொதுவாக சினிமா என்றாலே சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகள் என்று கிடையாது யாராக இருந்தாலும் அவர்களின் மீது சர்ச்சைகள் எழுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவரின் மீது காதல் சர்ச்சைகள் இரண்டாவது முறையாக ஏற்பட்டு உள்ளது. அதைப் பற்றி தற்போது பார்ப்போம் பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷபானா.
பொதுவாக கேரள பெண் என்றாலே ரசிகர்களுக்கு பிடிக்கும் அதுவும் சின்னத்திரையில் மலையாளி பெண் என்றால் எந்த ரசிகர்கள்தான் பிடிக்காது. அந்தவகையில் கேரளா மாநிலத்தில் இருந்து இவர் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
அதோடு இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக கார்த்திக் நடித்து வந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக அமைந்தது எனவே சபானானும் கார்த்தியும் உண்மையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மையில்லை என்று சில நாட்கள் கழித்து தெரியவந்தது.
இப்படிப்பட்ட நிலையில் ஷபானா மீண்டும் பிரபல சீரியல் நடிகருடன் ட்விட்டரில் காதலித்து வருகிறார். இதனைப் பார்த்த ரசிகர்களும் காதலுக்கு கண்ணில்லை ஆனால் அதற்க்குனு இப்படி கூட காதலிப்பார்கள் என்று கூறி வருகிறார்கள்.
அந்தவகையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் ஆரியன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனென்றால் அடிக்கடி இவர்கள் ட்விட்டரில் அதிகமாக பேசி வருகிறார்களாம் அதோடு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் இருவரும் சம்பந்தப்பட்ட ஒரு பதிலை கொடுக்கிறார்களாம்.