மீடியா உலகில் நடிக்க ஆசைப்படும் பல நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி நடிக்கின்றனர். அந்த வகையில் சினிமாவில் நடித்து திரையில் தனது முகம் தெரிய வேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த வாய்ப்பு எடுத்தவுடனே எல்லோருக்கும் கிடைத்து விடாது. அதனால் முதலில் குறும்படம், டிவி சீரியல்கள் போன்றவற்றில் அறிமுகமாகி அதன் மூலம் பெரிய பெரிய வாய்ப்புகளை கைப்பற்றுகின்றன.
அந்த வகையில் திறமை இருக்கும் பல நடிகர் நடிகைகளும் தற்போது சின்ன திரையில் பயணித்து வருகின்றனர். ஆம் அப்படி விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கம்பம் மீனா. இவர் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்.
மேலும் கம்பம் மீனா சொந்த குரலில் சீரியலில் டப்பிங் கொடுத்து வருவதால் அவரது குரல் வளத்தினாலும் பல ரசிகர்களை கட்டி போட்டவர். பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி பாக்யா தற்போது கதையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகிறார். அப்போது அவர் வீட்டை விட்டு வெளியேறியதும் பாக்கியாவுடன் குடும்பத்தில் உள்ள யாரும் துணை நிற்காத பட்சத்தில் செல்வி தான்..
பாக்கியவுடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கம்பம் மீனா பாக்கியலட்சுமி தொடரை தவிர்த்து விஜய் டிவியில் மற்றொரு டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரிலும் தனத்தின் அண்ணியாக கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் இந்த சீரியல் மூலமும் இவர் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வபோது கம்பம் மீனா சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் தற்போது தனது மகன் மற்றும் மருமகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியேற்றுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.