சர்ச்சைக்கு குறை வைக்காத சீரியல் நடிகை – தெறிக்க போகும் சீசன் 6..! யாருடா அது.?

bigboss
bigboss

தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு  மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் தமிழிலும் இந்த நிகழ்ச்சி நடத்திப் பார்க்கலாம் என புதுவிதமாக விஜய் டிவி டீம் யோசித்து முதல் சீசனை ஆரம்பித்தது. முதல் சீசனை கமலஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.

முதல் சீசன் யாரும் எதிர்பார்க்காத அளவு மக்கள் மத்தியில் சென்றடைந்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மக்கள் பலரும் இதனை விரும்பி பார்க்க தொடங்கினர். அதனால் இந்த நிகழ்ச்சி தமிழில் சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் கூடிய விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் அதனால் ஆறாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் வெளிவரவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் ஆறில் கலந்து கொள்ள போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அதன்படி நாளுக்கு நான் பிக் பாஸ் ஆறில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பெயர்கள் தான் வெளி வந்த வண்ணமே இருக்கின்றன. இதுவரை வீஜே ரக்ஷன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, கார்த்திக் குமார் மற்றும் இமானின் முன்னாள் மனைவி போன்ற சிலரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக சர்ச்சை நாயகி ஒருவர் பிக் பாஸ் 6 யில் நுழைய உள்ளாராம்.

ஆம் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி சில நாட்களாக சில அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். அவர் சிம்பு எனக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார் என இஷ்டத்துக்கு சோசியல் மீடியாவில் சில தகவல்களை பரப்பி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் ஆறில் ஸ்ரீநிதி கலந்த கொண்டால் இந்த சீசன்ல கண்டிப்பா சம்பவம் இருக்கு என நெட்டிசன்கள் பலரும் பேசி வருகின்றனர்.