சமீப காலமாக தொலைக்காட்சிகள் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என சிறப்பாக கொடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என பலவும் மக்களுக்கு மிகவும் பிடித்தவை. மேலும் சீரியல்கள் வெற்றி பெற பெரிதும் சீரியல் கதாநாயகிகளே காரணம் ஆவார்கள்.
அவர்களின் அழகு மற்றும் நடிப்பு திறமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கின்றன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம்ம ஹிட் அடித்த நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்கள் மூலம் நடித்து பிரபலம் அடைந்தவர் சரண்யா துரடி. இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு மாடலிங் மற்றும் நடிப்புத் துறை என அனைத்திலும் ஆர்வமாக இருந்தார்.
அதனை அடுத்து இவர் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியலை அடுத்து சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசையில் சமீபகாலமாக அவரது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு இன்னும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனை அடுத்த இவருக்கு மறுபடியும் விஜய் தொலைக்காட்சியில் வைதேகி காத்திருந்தால் என்ற புது சீரியலில் கதாநாயகியாக நடிக்கவே வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த சீரியலில் நடிகை சரண்யா பிரஜன் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் இவர் ஒரு கேடி கில்லாடி பெண்ணாக நடித்து மக்களை மகிழுவித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் புடவை அணிந்து செம கிளாமராக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.