சீரியல் நடிகைகள் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ரசிகர்களை கவர்வதற்காக ஏதாவது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவர் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் கூறுவதாக நினைத்து நெட்டிசன்கள் இடம் வாங்கி கட்டிக்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் என்றால் அது பகல் நிலவு சீரியல் தான். இந்த சீரியலில் நடித்த அன்வர் மற்றும் சமீரா உண்மையான காதலர்கள் என்பதும் இதனையடுத்து இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் இந்த சீரியலை தொடர்ந்து ரெக்க கட்டி பறக்குது என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் இவரை காதலித்து அன்வர் என்பவர் ஒரு சில தொடர்களை தயாரித்து வருகிறார்.இந்த நிலையில் அன்வர் மற்றும் சமீரா இருவரும் கடந்த நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் சீரியல் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் இருவரும் இணைந்து யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள் அதில் நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை என்ற தலைப்புடன் ஒரு வீடியோவை பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த வீடியோவில் உள்ளே சென்று பார்த்தால் நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை பெற்றோர்கள் எனக் கூறி மொக்கை வங்கினார்கள்.
தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் முறையை தான் இவ்வாறு செய்திருந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி வருகிறார்கள் அதே போல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் ஒரு குழந்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்ற வசனம் கூடிய டீசர்ட் அணிந்து புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதாவது தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக வித்தியாசமாக கூறுவதாக நினைத்து இவ்வாறு செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சிலர் வாழ்த்து தெரிவித்து வந்தாலும் சில ரசிகர்கள் இதை இப்படித்தான் அறிவிப்பீர்கலா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.