பிரபல சீரியல் நடிகை ஒருவர் முதன்முறையாக ஜீ தமிழ் சீரியலில் இணைந்துள்ள தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது சின்னத்திரையின் மூலம் இறுதியில் பிரபலமடைந்து விடலாம் என்பதற்காக சினிமாவில் பிரபலமடைய விரும்புபவர்கள் முதலில் சீரியல் நடிப்பதை தொடங்குகிறார்கள் இதன் மூலம் இவர்களுக்கு விரைவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது.
அந்த வகையில் விஜய் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் பெற்ற சீரியல் தான் பகல் நிலவு. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகை தான் சஹானா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து அசத்திய இவர் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான அழகு தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியலை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான சுந்தரி நீயும் சுந்தரனாலும் தொடரில் நடித்த அசத்திறந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் பாலாவின் தாரதப்பட்டை, விஜய் ஆண்டனியின் சலீம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தொகுப்பாளராகவும் ஒரு சேனலில் பணியாற்றி அசத்தியவுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே மற்றும் தாலாட்டு ஆகிய சீரியல்களிலும் நடித்து அசத்தியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு அபிஷேக் என்பவருடன் ஆகஸ்ட் 2021-ல் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த புது புது அர்த்தங்கள் தொடரில் நடித்து வந்த இவர் தற்பொழுது மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் புதிதாக என்று கொடுத்துள்ளார் இது குறித்த புரோமோ வெளியாகிவுள்ளது.