தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் தொடர்ந்து TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அந்த வகையில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ரோஷினி அவருக்கு ஜோடியாக அருண் நடித்து வருகிறார்.இவர்களை தொடர்ந்து பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் குடும்ப கதையையும், ஒரு பெண் மன ரீதியாக எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்தும் இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ரோஷினி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்தவகையில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் வேடத்தில் சமீபத்தில் சீரியல் நடிகை ரச்சிதா தனது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் தற்போது ரோஷினியும் அம்மன் வேடத்தில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவிற்க்கு அடுத்ததாக நீங்கள் நயன்தாராவை காப்பி அடித்து உள்ளீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.