விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரோஷினி. இவர் கருப்பாக இருந்தாலும் கூட இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிகண்ணம்மா சீரியல் கிருஷ்ணாகோலி என்ற பெங்காலி சீரியல் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் ரோஷனி,அருண் பிரசாத், ஃபரினா ஆசாத் உள்ளிட்ட தொடர்ந்து இளம் புதுமுக நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் டாப் சீரியல்களில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் ரோஷினி இல்லதரசிகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவ்வாறு மிகவும் நன்றாக நடித்து வந்த இவர் எதிர்பாராதவிதமாக சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகினார்.எனவே தற்போது இவருக்கு பதிலாக கண்ணம்மா கேரக்டரில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார். தற்பொழுது ரோஷினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.
அதோடு இவர்கள் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவ்வாறு பார்ப்பதற்கு மிகவும் அம்சமாக இருக்கும் இவர் கத்திரிப்பூ கலர் தாவணி பாவாடையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.