எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அழகுதான் ரசிகர்களை ஒரேடியாக சாய்த்த கண்ணம்மா.! வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு உருவாகி விடுகிறது. அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தனது முதல் சீனிலேயே பிரபலமடைந்தவர் தான் நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன்.

பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது. அதோடு இதனை பார்ப்பதற்கு என்றே தனி ஒரு ரசிகர் பட்டாளம் அமைந்ததால் ரோஷ்னி ஹரிப்ரியன் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ரசிகர்கள் பலர்  ரோஷினியை பார்ப்பதற்காகவே இந்த சீரியலை பார்ப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.

இவர் கருப்பாக இருந்தாலும் கூட இவரின் நடிப்பு திறமை அனைவராலும் பேசப்பட்டது. இவ்வாறு போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.  இந்த தகவல் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கண்ணம்மா கேரக்டரில் வினோதா தேவி என்பவர் நடித்து வருகிறார். இவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ரோஷினி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மவுசு இல்லை.

ரோஷ்னி ஹரிப்ரியன் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணம் சினிமாவில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது அதனால் தான் சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் தனது க்யூட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

roshni 1
roshni 1

அந்த வகையில் சமீபத்தில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி பார்த்தாலும் நீ அழகுதான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

roshni 2
roshni 2
roshni
roshni

Leave a Comment