சின்னத்திரையில் நம்பர் 1 சீரியல் என்ற இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் இவர் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.
மேலும் இந்த சீரியல் டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலையில் வகிக்க ஒரு முக்கிய காரணமாக விளங்கியவர் ரோஷினி. இப்படி பாரதிகண்ணம்மா சீரியலில் சிறப்பாக பயணித்து வந்த ரோஷினி சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதில் தற்போது அவர் சாயலில் வினிஷா தேவி என்ற பிரபலம் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாரதிகண்ணம்மா சீரியலை தொடர்ந்து டாப் லிஸ்டில் வைத்து வருகிறார். அந்த வகையில் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே ரோஷினி ஹரிப்ரியன்.
விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த வித் கோமாளி மூன்றாவது சீசனில் கலந்துகொண்டுள்ளார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக சமையல் செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சமீபகாலமாக இவரது புகைப்படங்கள் கொஞ்சம் கிளாமராகவும் அமைகின்றன.
அந்த வகையில் தற்போது இவர் கருப்பு நிற டிரஸ்ஸை அணிந்து கொண்டு டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கிளாமராக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்.