விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்றி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரித்திகா. இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்திருந்தார்.பிறகு சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று வந்த இவர் குக் வித் கோமாளி சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதன்மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் ஏனென்றால் இவரின் உடை மாற்றும் பேச்சு அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. என்னதான் இவர் சின்னத்திரையில் பிரபலமடைந்து இருந்தாலும் புடவையில் மிகவும் அழகாக குடும்பப் பெண் போல் இருக்கிறார் இதுவே இவரின் பிளஸ் பாயிண்ட் என்று கூறலாம்.
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது கூட மாடன் உடையாக இருந்தாலும் அடக்க ஒடுக்கமாக தான் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் பாக்யலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக இருந்து வரும் இவர் தனது கணவனை இழந்து மாமனார்,மாமியார் மற்றும் தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சின்னத்திரையில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வரும் இவர் புதிய கார் ஒன்றை வாங்கிவுள்ளார். அவ்வப்பொழுது தன் தம்பியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.