ஆட்டத்தை பார்த்து துரத்த ஆரம்பித்த இரண்டு நாய்கள்.! துள்ளி குதித்து ஓடும் ரவீனா..

சினிமாவில் உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வரும் நடிகை தான் ரவீனா தாஹா.இவர் சைக்கோ திரில்லர் படமான ராட்சசன் திரைப்படத்தின் மூலம் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

மேலும் இதற்கு முன்பு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தார். 18 வயதே ஆகும் ரவீனா தாஹா  தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து நடனமாடும் வீடியோக்கள், குறும்பு செய்யும் வீடியோக்கள் என பலவற்றையும் வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். அந்த வகையில் இவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் இவர் நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த இரு நாய்கள் திடீரென ரவீனாவை கடிக்க தொடங்கியது.

ஆரம்பத்தில் சின்ன நாய்கள் தானே என அசால்டாக இருந்த ரவீனா மீண்டும் ஆட தொடங்குகிறார் அப்பொழுது மறுபடியும் அந்த இரு நோய்களும் அவரை துரத்தி விரட்டுகிறது உடனே துள்ளி குதித்து ஓட்டத்தை பிடிக்கிறார் ரவினா. இந்த வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் தொடர்ந்து நகைச்சுவையான டப்மாஸ் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு ரவீனா தாஹா முதன் முதலில் நடன நிகழ்ச்சியின் மூலம் தான் தன்னுடைய கெரியரை தொடங்கினார் அதன் பிறகு தான் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.